பிதாமகன், நந்தா ஆகிய படங்களைத்தொடர்ந்து கிட்டத்தட்ட, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யா,இயக்குனர் பாலாவுடன் புதிய படத்துக்காக இணைந்துள்ளார்.இது குறித்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா தனது தந்தையின் பிறந்தநாளில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து இப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும்,இன்னொரு வயதான சூர்யா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பழம்பெரும் பாலிவுட் நடிகை ஹேமமாலினி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்,இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது என்கிறார்கள்.
இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூர்யா இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ்இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில்,தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு,மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் படக்குழு.