“இவ்வளவு பணம் கொடுக்க முடியுமா ,எங்கம்மாவுக்கு அடிமையாக இருக்க முடியுமா “இப்படி பல டிசைன்களில் கண்டிஷன் போடுகிறார்கள் கல்யாண மாப்பிள்ளையாக வருகிறவர்கள்.
“உங்களுக்கு மட்டும்தான் நிபந்தனைகளை சொல்ல முடியுமா ,நாங்களும் சொல்லுவோம்ல”என்று மணமகளும் கண்டிஷனை போடுகிறாள்.
இந்தியில் நம்ம ஊர் தனுஷ் விசுவாக நடித்துவருகிற படம் அத்ராங்கி ரே . இவருடன் நடிப்பவர் பாலிவுட் பிரபலம் சாரா அலிகான்.
இவர் பிரபல நடிகர் சயீப் அலிகான் -அம்ரிதா சிங்கின் மகள் .சயிப்பின் முதல் திருமண விளைச்சல்.! மண விலக்குப் பெற்ற அம்ரிதா மகளுடன்தான் வாழ்ந்து வருகிறார்.
கல்யாணம் பற்றி பேசினாலே அது கலகலப்பான நியூஸ்தானே !
“கல்யாணம்தானே ,பண்ணிக்கிறேன்.ஆனா ஒரு கண்டிஷன்.எனக்கு புருஷனாக வரப்போகிறவர் சினிமாவை சேர்ந்தவராக இருக்கவேண்டும். ( யாராவது அப்ளிகேஷன் போட்டிருப்பாய்ங்களோ ?) எங்கம்மா எங்கூடத்தான் இருப்பாங்க. எங்கம்மாவை விட்டுட்டு தனியால்லாம் வரமாட்டேன்.”என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார்.
சரிம்மா…உன்னோட சொத்தெல்லாம் மாப்பிளைக்குத்தானே ?