
தமிழக சட்ட மன்ற தி.மு.க. உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் நாக் ஸ்டுடியோவில் தொடங்கியது . முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி எழுதிய தி.மு.கழக வரலாற்று நூலின் பெயர்தான் நெஞ்சுக்கு நீதி.
உதயநிதி தனது தாத்தாவின் நினைவு கூறுகிற வரலாற்று பெயருடன் தன்னை இணைத்துக்கொண்டிருப்பது பெருமைக்குரியது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. ஜி மற்றும் போனி கபூரின் பே வியூ புராஜெக்ட் வழங்க ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.












