“வரலாறு முக்கியம் அமைச்சரே” –இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல. அதுவும் வடிவேலு வாயாலே !
எஸ் ,இப்ப அது ஒரு படத்தின் டைட்டில்.!
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிற படத்தில் மகன் ஜீவா லீடு ரோல்.
நடிகர் ஜீவாவின் திரையுலக வெற்றிப் பயணத்தில் ரோம்-காம் படங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. ‘சிவா மனசுல சக்தி’ போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி இன்னும் சில திரைப்படங்கள் நீளும்
இந்த வரிசையில், தற்போது ஜீவா மீண்டும்’வரலாறு முக்கியம்’ என்ற ரோம்-காம் படத்தில் நடிக்கப்போகிறார். அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார்.
நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி வி கணேஷ், கே.எஸ்..ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா,இ .ராமதாஸ், மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.