ஏனிந்த கசப்பு, எதற்காக இந்த துறவு ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கணவன் தனுஷை பிரிந்து வாழப்போவதாக அறிவித்திருப்பதின் பின்னணி என்ன?
பெரிய இடத்து விஷயமப்பா! புண்ணுக்கு லிப்ஸ்டிக் போட்டு மறைக்கப்பார்ப்பார்கள்.இன்னும் என்னன்னவோ …!
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு முதல் கணவனை விட்டு விலகியவர்தானே?
தனுஷின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.மனைவியைப் பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்தார் என்பதாக.!
அதன் விளைவுதானோ நேற்றைய பின்னிரவு அறிக்கை?
மஞ்சள் காமாலை என்பதாக பொய் சொல்லி ஊர் சுற்றியவர் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில்,பேச்சு.!
வளர்ந்து வந்த நிலையில் பல பல பேச்சுக்கள். கணவனை விட்டு தனியாகத்தான் ஐஸ்வர்யா வாழ்ந்திருக்கிறார்,ரஜினிகாந்த் வெளியூர் சென்றபோதெல்லாம் இவர் மட்டுமே அப்பாவுக்கு ஆறுதலாக சென்றார். மகளின் துறவற வாழ்வு தந்தைக்கு தெரிந்தே இருந்தது என்கிறார்கள்.
திரையுலகில் கம்பீரமாக வாழ்ந்த மனிதருக்கு இப்படியொரு சோதனையா ?
பிரபலமான அக்கினேனி குடும்பத்திலும் அண்மையில் இத்தகைய துயர நிகழ்வு நடந்தேறியது .
சமந்தா- நாக சைதன்யா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். அது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் தற்போது வரை பெரும் அதிர்ச்சியாய் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் நடிகர் தனுஷ் மற்றுமொரு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு தனுஷ் திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.