இந்த புன்சிரிப்புக்கு என்ன காரணம்?
ஆளை அடிக்கும் வசீகர வார்த்தைப்பிரயோகம். வாள் வீசும் வலைக்கண்களால் வசியப்படுத்துகிற மந்திரம்.
அதரங்களில் மின்னும் தேனின் மினுமினுப்பு,கட்டுக்குலையாத வாலிபத்தின் கவர்ச்சி ,அடடா அடடா ….என்னே அழகு ,என்னே அழகு !
இப்படியெல்லாம் திவ்ய தர்ஷினியின் புகைப் படத்தைப் பார்த்ததும் சொல்லத் தோணுமே! இன்று அவரது இன்ஸ்டராவைப் பார்த்ததும் புடவைகளில் திடீரென போட்டோ ஷுட் நடத்திய படங்களை வெளியிட்டிருந்தார்.
எண்ணியதெல்லாம் நடக்கிறபோது ஆனந்தம் அள்ளிக்கொண்டுப் போகாதா?
என்ன சொல்கிறீர்கள் என்கிறீர்களா?
கேள்விப்பட்டதை சொல்கிறோம்.
தெலுங்குப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வாசல் வரை வந்து விட்டது என்கிறார்கள்.
தளபதி விஜய்,தனுஷ் ,சிவகார்த்திகேயன் ஆகியோர் இப்போது தெலுங்குப்படஉலகில் மும்முரமாக இருக்கிறார்கள்.இவர்களில் யாரேனும் ஒருவருடன் புது முகத்தை நடிக்க வைத்தால் என்ன ?
இப்படி கணக்குப்போட்டு காய் நகர்த்துகிறார்கள் தெலுங்குப்பட அதிபர்கள் .
காலமும் நேரமும் அவர்களுக்கு எப்படியெல்லாம் கை கொடுக்கிறது பாருங்கள்.!