சூப்பர் ஸ்டார் ரஜினி ஆழ்ந்த கவலையில் இருக்கிறார் என்கிற செய்தி இன்று கோலிவுட்டில் வட்டமடிக்கத் தொடங்கி இருக்கிறது.
“குடும்பத்தின் மீது அழுத்தமான பற்று பாசம் வைத்தித்திருந்தால் அதுவே அவனை பொசுக்கிவிடும் ” என்பதைப்போல ஒரு வசனத்தை சொந்தப்படமான பாபாவில் வைத்திருந்தார் ரஜினிகாந்த்.
அந்த வசனம் இன்று அவருக்கே பொருந்துவது விதிதான்.!
மருமகன் தனுஷ் – மகள் ஐஸ்வர்யாவின் மணவிலக்கு அறிவிப்பு அவரை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக தற்போது செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார் என்கிறார்கள்.முன்னெல்லாம் அந்த தம்பதியர் சண்டைபோட்டுக் கொண்டபோது இவர்தான் தலையிட்டு சமரசம் செய்து வைத்திருக்கிறார் என்கிறார்கள். ஆகவே விரைவில் இணைப்பு வெற்றிகரமாக முடிந்து விடும் என்கிறார்கள்.
நல்லது நடந்தால் வரவேற்கவேண்டியதுதானே!