கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது.
முதலில் வந்த ஸ்னீக் பீக்கில் ,சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையா தேவர், பி.ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் ஆகியோர் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டரில் தந்தை பெரியார் படம் இல்லை.நெடுஞ்செழியன் படம் இருக்கிறபோது பேரறிஞர் அண்ணா படமும் இல்லை. ஆக இந்த ஸ்னீக் பீக் அருத்தமற்றதாகவே கருதப்பட்டது.என்ன வகையான ஒப்பீடு என்பதும் புரியவில்லை,
அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக்கில் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான ,நையாண்டி தனமாகவும்,அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
அடுத்தாக வெளி வந்த ஸ்னீக்பீக் -2 போஸ்டரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், இருந்தார்கள். இதில் ஈ .வே.கி.சம்பத் இல்லை . இந்த போஸ்டர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை ,பிரிவுகளை உணர்த்தியது. ஒரு டீ கடை ஒருகுறியீடு.
ஸ்னீக்பீக் -2 வீடியோவில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம், அதிமுக கொடி போன்று வரையபட்ட சுவத்துக்கு கீழே ரித்திகா சோகமாக உட்காந்து இருப்பது போன்று போஸ்டர் வெளியிடப் பட்டு உள்ளது. இது ஒரு உள்ளடி அரசியலாக இருக்கலாம் .
வீடியோவில் திருக்குறள் எழுதியது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது அதி புத்திசாலியின் வெளிப்பாடு என்றே தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி ,பன்னீர்செல்வம் வகையறாக்களின் இலக்கிய அறிவினை காட்டுவது போல் அமைந்து உள்ளது.
வித்தியாசமான போஸ்டர்கள், மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ,என்றாலும்,
என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை.சொன்னால் அதை இங்கு பிரசுரிக்கலாம் . பரமனின் இயக்கத்தில் வெளிவரும் பப்ளிக் படம் விளக்கமாக அரசியல்பேசினால் நல்லது.