தொடக்கத்தில் இருந்தே பிரதமர் மோடியின் கொள்கைகளை கடுமையுடன் விமர்சிப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ் .பிஜேபியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் .
தற்போது பிஜேபி.கூட்டணியை எதிர்த்து தேசிய அளவில் அமையவிருக்கிற கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
திமுக,காங்கிரஸ் ,திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் அமையவிருக்கிற அந்த கூட்டணியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரது கட்சி ‘ராஷ்ட்ர சமிதி ‘சேரவிருக்கிறது.இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசின் முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் ( சிவசேனா ) பேசுவதற்காக மும்பை போயிருக்கிறார்.தனது குழு உறுப்பினர்களுடன் அவர் இந்த சந்திப்பு முடிந்ததும் தேசிய காங் கட்சியின் தலைவர் சரத் பவாரையும் சந்தித்துப்பேசினார்.
இந்த சந்திப்பில் வியப்புக்குரிய அம்சம் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டதுதான்.
சந்திரசேகர்ராவ் கட்சிக்கும் பிரகாஷ் ராஜ்க்கும் என்ன தொடர்பு ,கூட்டணி அமைவதில் அவரது பங்கு என்ன என்பதும் தெரியவில்லை.