
ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு ‘ தீயவர் குலைகள் நடுங்க ‘ என பெயர் வைத்திருக்கிறார்கள். யார் எல்லாம் நடுங்கப்போகிறார்களோ.! ஜி. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கேரக்டர் மய்யமாக அமைந்திருக்கிறது. நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), பணிகளை செய்துள்ளனர். நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் .மற்றும் நடிகர் விஷாலின் அப்பா ஜி.கே. .ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.












