“கவுரவத் தோற்றம்தானே ? சரி இவ்வளவு ரூபாயை என் கணக்கில் போட்ரு ! நடிச்சிட்டுப் போயிடுறேன்” இப்படி சொல்லக்கேட்டுத்தான் பழக்கம். அதுதான் வழக்கமும் கூட.!
ஆனால் சல்மான்கான் இந்த அளவுக்கு இருப்பார்னு நினைக்கல. பெரிய சூப்பர்ஸ்டார், கலெக்சன் ராஜா .இப்படியெல்லாமா நிபந்தனை போடுவார்?
சங்கதிக்கு வருவோம்.
தெலுங்குப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘காட் பாதர்’னு ஒரு படம் எடுக்கிறார். மலையாள லூசிபர் படத்தின் ரீமேக்தான் இந்த காட்பாதர்.
இதில் கெஸ்ட் ரோலில் அதாவது கவுரவத்தோற்றத்தில் நடிப்பதற்கு தனது குடும்ப நண்பர் சல்மான்கானுக்கு அழைப்பு விடுத்தார்.
அவரும் சம்மதம் தெரிவித்து வந்துவிட்டார்.
“எவ்வளவு சம்பளம் வேணும் சார்.! இந்தாங்க செக்.நீங்களே பில்லப் பண்ணிக்குங்க !”
தயாரிப்பு நிர்வாகி நீட்டிய செக்கை திருப்பிக்கொடுத்த சல்மான் “அந்த வேலையே வேணாம். சம்பளம்னு சொல்லிட்டு யாரும் வந்திராதிங்க. பைசா காசு வேணாம். ஒரு நண்பரின் படத்தில் அவருக்காக நடிக்கிறேன்.என்னை சங்கடப்படுத்த வேணாம்.நான் சிரஞ்சீவிகாருவின் உண்மையான நண்பன் “என சொல்லிவிட்டார்.
மனுசன்யா ! நட்புக்கு மரியாதை.!