விளம்பரங்களை அள்ளி வீசினார்கள்.பாகுபலிக்கு அடுத்துபிரபாஸுக்கு இந்தப்படம்தான் சூப்பர் டூப்பர் சக்ஸஸ் என்று ‘ராதே ஷ்யாம் ‘படத்துக்கு ஜோசியம் சொன்னார்கள்.
இந்த படத்தில் பிரபாஸ் ,பூஜா ஹெக்டே ,சத்யராஜ்,பாக்யஸ்ரீ ,பிரியதர்ஷினி ,ஜெயராம் ,தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டது. ‘பான் இந்தியா படம்.100 கோடி செலவு என்பதாக சொல்லப்பட்டது.
பிரபாஸுக்கும் இயக்குநர் ராஜமவுலிக்கும் பிரச்னை.இதன் காரணமாக பிரபாஸ் ஆந்திராவில் புரமோஷன் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.
விளைவு?
படம் மொத்தமாகவே படுத்து விட்டது.! பிரபாஷின் ரசிகர்களே விரும்பவில்லை !
உலக அளவில் 200 கோடி ரூபாய் அளவுக்கு உரிமை விலை போனது! முதல் வாரத்தில் 78 கோடி தான் கலெக்சன் என்றால் கடுப்பு வராதா?கடைசியாக வந்த வசூல் 85 கோடிதான் என பத்திரிகையாளர்கள் சொல்லுகிறார்கள்.100 கோடிக்கு மேல் நட்டமாம்!
தெலுங்கில் முதல் வார வசூல் 63 கோடிதான் ! உலக அளவில் முதல் வார வசூல் 77.86 கோடி.!
‘ராதே ஷ்யாம்’ வெளியான நாளன்று வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பிரபாஸ் படத்துக்கு ஆணி அடித்து விட்டது.