சின்னத்திரை தொகுப்பாளராக களமிறங்கி படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமா நட்சத்திர நாயகர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்து விட்ட, நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் நாயகனாக களமிறங்கியுள்ளார்.
இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து வருகிறது.இந்நிலையில்,திருவீழி
இந்த திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் ஆகும். இந்தியாவின் தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். ‘திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.