எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’.
ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.
சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
தயாரிப்பாளர் நடிகர் பி.ஆர்.. தமிழ் செல்வம் ,நடன அமைப்பாளர் தீனா ,இயக்குநர் ஆர் வி உதயகுமார்.,தயாரிப்பாளர் நடிகர் ஜெயம் எஸ் கே கோபி ,தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் ,ரேகா பிலிம்ஸ் சக்ரவர்த்தி ,நாயகி மதுநிக்கா , இசையமைப்பாளர் பரணி ,நடிகர் ராஜ்கபூர் ,நாயகன் ஆதவ் பாலாஜி ,தயாரிப்பாளர் கே.ராஜன் , இயக்குனர் பேரரசு ,ஆகியோர் பேசினர்
இயக்குனர் வேலன் கூறியாவேளாண் ,தாவது..,
“இந்த கதை எப்படி ஜெயிக்குமா என்ற சந்தேகம் வந்த போது, தயாரிப்பாளர் என்னை முழுதாய் நம்பினார். இது என்னை விட இயக்குநருக்கு முக்கியமான படம் இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று நம்பினார். இசையமைப்பாளர் பரணி வேகமாக பணியாற்றினார். பரணியின் பார்வை ஒன்றே போதுமே, படம் பார்த்த பின்னர் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைத்தேன். அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
ஒளிப்பதிவாளர் வேல் , கடின உழைப்பை கொடுத்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். நான் கேட்பதை அப்படியே கொடுத்தார் ஆக்ஷன் இயக்குனர். நடன இயக்குனரும் எனக்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். நடிகர், நடிகையர் நன்றாக நடித்துள்ளனர். ராஜ்கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கபட்டது அல்ல. எல்லோருக்கும் நன்றி”என்றார் .
இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.