தளபதி விஜய் தன்னுடைய வீட்டில் கொடுத்த உற்சாக விருந்து பற்றித்தான் கோலிவுட்டில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.
“எங்களுக்கெல்லாம் எப்ப விருந்து கொடுப்பீங்க “என்று கேட்டதற்கு பிறகுதான் விருந்து கொடுத்திருக்கிறார் என்று சிலரும் ,”தோல்வியை மறைப்பதற்காக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தன்னுடைய மாளிகையின் கதவைத் திறந்திருக்கிறார் “என்று மேலும் சிலரும் பேசுகிறார்கள்.
ஒரு புகழ் வாய்ந்த நடிகர் மீது சேறு வீசுகிறோமே என்கிற குற்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. இதே நடிகர் அவர்களையும் அழைத்திருந்தால் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். இதுதான் கோடம்பாக்கம்.
“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் .வையகம் இதுதானாடா “என்கிற கவி காமு ஷெரிப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.












