
“கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்சன் நிரம்பிய “புரடக்சன் நம்பர் 9 “என்கிற க்ரைம் த்ரில்லர் திரைப்படம், திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய விருந்தாக இருக்கும்.
படத்தின் இயக்குனர், தட்சிணாமூர்த்தி ராமர் கூறும்போது, “கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் மெய் சிலிர்க்கும் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன்.
திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார்.
சரத் குமாரின் கதாப்பாத்திரம் குறித்து மேலும் கூறுகையில், “இதுவரை சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்.”என்று கூறினார்.












