“தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார்?”
யாருக்காவது தெரியுமா ?
தமிழக அரசியல் பற்றி தெலுங்கானாவில் முதலமைச்சருடன் தளபதி ஆலோசனை நடத்தியது ஏன் ?
–இப்படியெல்லாம் கோலிவுட்டில் சிலர் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை ஹைதராபாத் பிரகதி பவனில் சந்தித்துப் பேசியிருக்கிறார் தளபதி விஜய்.
தற்போது தெலுங்கு -தமிழ் இரு மொழி படத்துக்காக ஹைட்டிஹராபாத் சென்றிருக்கும் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறார் என்பது அரசு தரப்பு செய்தி.
அரசியல் தரப்பு சொல்வதென்ன?
விஜய்யின் எதிர்கால அரசியல் பிரவேசம் பற்றி முதல்வர் கேட்டறித்திருக்கிறார்.இருவரும் பேசுகிறபோது அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் ஜோகினபள்ளியும் கூட இருந்திருக்கிறார்.இவருக்கும் விஜய்யின் அரசியல் திட்டம் தெரியும் என்கிறது அரசியல் தரப்பு. முதல்வர் கே.சி.ஆருடன் விஜய் சந்திக்கிற ஏற்பாட்டினை இயக்குனர் வம்சி பைதிப்பள்ளி செய்தார் என்கிறார்கள்.
விஜய்யக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசினை கொடுத்த முதல்வர் தன்னுடைய வாழ்த்தினை முன்னதாகவே தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.