சிறுமியர் மீது பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடச் செய்தியாகி விட்டது. என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அவைகளை வளைப்பதற்கு அதிகாரவட்டமே துணை நிற்பதால் சட்டங்கள் பயனற்று போகின்றன.
சுழல் –ஐந்தரை மணி நீளத் தொடரில் என்ன சொல்லியிருக்கிறார்கள்.? பார்க்கலாம்.!
தொழிற்சங்கத்தலைவராக பார்த்திபன். இவரது மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ். கோபிகா ரமேஷ். இருவரில் பின்னவரான கோபிகா காணாமல் போகிறார் .கடத்தப்பட்டாரா ,அல்லது தானாக போனாரா ,எங்கு போனார் ,என்னவானார் ,முடிவு என்ன என்பதுதான் சுவையான கதை..
பார்த்திபன் எங்கும் எதிலும் சோடை போனதில்லை. கற்பனை சக்தியுள்ள ஒரு படைப்பாளியிடம் எத்தகைய கேரக்டர் மாட்டினாலும் அவை சிறப்பாக செய்து முடிக்கப்படும் அது பார்த்திபனின் வலிமை. மகளை நினைத்துக் கலங்கும் இடத்தில் படம் பார்க்கிற இருபாலாருமே கண்களில் பதிவு செய்து கொள்கிறோம். ஈரம் ! தொழிற்சங்கவாதி என்பதால் அதில் ஒரு கம்பீரம் .
ஐஸ்வர்யா ராஜேஷ் ,விஜய்சேதுபதியின் சிஷ்யை. முதல்பாதியில் அதிகம் வாய்ப்பு இல்லையென்றாலும் இறுதியில் உயர்ந்து நிற்கிறார்.சூப்பர்.!
திமிர் காட்டி நடிப்பதற்கென்றே சி.கே. ரெட்டி குடும்பத்தின் மருமகள் ஷ்ரேயா ரெட்டி. காவல்துறை ஆய்வாளர். கம்பீரம். துணிச்சல் .அந்த பதவிக்கு பெருமை சேர்த்திருக்கிறார் .சிறப்பு!
கதிர் சப்- இன்ஸ்பெக்டர் .தொடர் முழுவதும் பயணிக்கிற கேரக்டர்.காதலை வெளிப்படுத்துகிற இடம் ,அதை வருங்கால மனைவியிடம் வெளிப்படுத்துகிற பாங்கு அருமை.
புஷ்கர் -காயத்ரி போன்ற படைப்பாளிகளின் பட்டியலில் இளங்கோ குமரவேல் நிச்சயம் இடம் பெறுவர்.மற்றும் பிரேம் குமார் ,ஹரிஷ் உத்தமன் , ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
உலகநாயகனின் நண்பர் சந்தான பாரதி பிரமாதமாக நடித்திருக்கிறார் .சரியான கேரக்டர்.
சாம்.சிஎஸ் இசையும் , முகேஸ்வரனின் ஒளிப்பதிவும் தொடருக்கு வலிமை.!
எட்டு அத்தியாயங்களாக ஒளிபரப்பாகும் இத்தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை பிரம்மாவும் அடுத்த நான்கு அத்தியாயங்களை அனுசரணும் இயக்கியிருக்கிறார்கள்.
இத்தொடரை எழுதியதோடு படைப்பாக்க இயக்குநர்களாக புஷ்கர் காயத்ரி இணையர் இருக்கின்றனர்.
சமுதாயத்துக்குத் தேவையான ஒரு தகவலை உரக்கச் சொல்லும் நோக்கத்தில் ஒரு துப்பறியும் திரைக்கதையை அமைத்து அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை திருவிழாவைப் பின்புலமாக வைத்திருக்கிறார்கள்.
அரக்கனை அழிக்கும் அம்மன், பாவாடைராயன், சதுக்க சாமி என மயானக்கொள்ளை விழாவின் பாத்திரங்களை படத்தின் கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
தொழிற்சங்கவாதியை கோடூர மனம் படைத்த குற்றவாளியாகக் காட்டியிருப்பதன் மூலமும்,
ஒரு மெல்லிய மையப்புள்ளியை வைத்துக்கொண்டு ஐந்தரை மணிநேரத்துக்கு ஒரு தொய்வில்லாத தொடரைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.