இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி வந்தது பாராளுமன்ற ராஜ்ய சபையின் சீட்டு?
அண்மையில் மோடி ஆதரவு புத்தகத்துக்கு மதிப்புரை வழங்கியதாலா ?
இல்லை ,இல்லவே இல்லை.!
பின் என்னதான் காரணமாக இருக்கக்கூடும்?
தாதா சாகேப் பால்கே விருது வழங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பெருமைப்படுத்திய காவி கட்சி ,ராஜ்யசபை இடத்தையும் ரஜினிக்கு வழங்குவதற்கு தயாராக இருந்தார்களாம்.
இதற்கு ,
அரசோ ,அல்லது அரசியல் கட்சிகளோ ரஜினிக்கு வழங்குவதை எதிர்க்கப்போவதில்லை. ரஜினி இன்றளவும் ‘பாக்ஸ் ஆபிசில் ‘ இருக்கிறார். அந்த வட்டத்தை விட்டு வெளியேறவில்லை.இது மட்டுமல்ல அண்மையில் விக்ரமின் இமய வெற்றியில் ரஜினியை பின்னுக்குத் தள்ளிவிட்ட உலகநாயகன் கமல்ஹாசனை வெறுப்பேற்றும் யுக்தியாகவும் எம்பி பதவியை ரஜினிக்கு வழங்க முடிவு செய்திருந்தது என்கிறார்கள்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ராஜ்ய சபையை விரும்பவில்லை என்கிறார்கள்.நெருக்கமானவர்கள்.

இதனால் ரஜினி தனக்கு நெருக்கமான இசைஞானிக்கு அந்த பதவியை கொடுக்கலாம் என்பதாக முடிவுக்கு வந்தாராம். இளையராஜா என்கிறபோது தமிழ்நாடு பாஜகவுக்கும் விருப்பமானதாகவே இருக்கும். கலைஞர் கருணாநிதி வழங்கிய இசைஞானி விருதினைக் கூட அவர்களால் வெறுக்க முடியவில்லை. இளையராஜாவும் மோடியின் ஆதரவாளர்தானே.! இசைஞானியை ரஜினி அண்மையில் இரண்டு தடவை சந்தித்துப்பேசியிருக்கிறார். அவர்கள் சந்திப்பில் ராஜ்ய சபை பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
எம்.பி.பதவி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதை தலித்துகள் அவ்வளவு பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. பக்திப்பாடல்கள் பாடிய அளவுக்கு கூட தலித்துகள் மீது ராஜாவுக்கு கவலை இல்லை என்பதாகவே கருதுகிறார்கள். மேலும் மோடிக்கு எதிரான கொள்கைதான் தமிழக தலித்துகளின் நிலையாக இருக்கிறது.
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமுக்கு மாறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் தன்னை உண்மையான கருப்பு திராவிடன் என்கிறார்.












