‘தோழா’படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து ‘காஷ்மோரா’ வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். 60 கோடி பட்ஜெட்டில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் காஷ்மோராவை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.காஷ்மோராவைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ‘சதுரங்க வேட்டை’ வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கஉள்ளாராம்.. கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.