
கொரானா யாரையும் விட்டு வைக்காது போல. குரங்கு போல தாவி தாவி பரப்பிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு குரங்கு அம்மை என்று புதுசா ஒரு அம்மை பரவிக் கொண்டிருக்கிறது.
தற்போது நாடறிந்த இயக்குநர் மணிரத்னம் கோவிட் சோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இன்னும் சோதனையின் முடிவு வந்து சேரவில்லை.
இன்று காலை மணிரத்னத்துக்கு டெம்பரேட்சர் அதிகமாக இருந்தது.அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .கொரானாவாக இருக்குமோ என்கிற சந்தேகம்.. தமிழகத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனை திரைக்கு கொண்டு வந்த பெருமை இவருக்கு இருக்கிறது.












