
கண்ணைத் திறந்து கொண்டே சிலர் கனா காண்பார்கள்.
தண்ணீரில் நீந்துவதாக கனவு கண்டு தரையில் கையை காலை உதறியவர்களும் இருக்கிறார்கள். தெலுங்கு ,தமிழ் இரு மொழிகளில் தளபதி விஜய் யை வைத்து படமெடுத்திருப்பவர் தில் ராஜு. ஆந்திராவில் பெரிய தயாரிப்பாளர்.
பாலிவுட்டிலும் பந்தாவாக வரணும்னு நினைத்து அங்கும் படமெடுத்தார். கவிழ்த்திப் போட்டுவிட்டது இரண்டு படங்களும்!
என் சோகக்கதையை கேளுங்கள் என்கிறார் இப்போது.!
“ஷாகித் கபூரை வைத்து நான் ஜெர்சி படம் எடுத்தபோது எப்படியும் 30 கோடியாவது ஆதாயம் இருக்கும் என்றுதான் கணக்குப் போட்டேன்.அப்பத்தான் அவரது ‘கபிர் சிங் ‘பெரிய சக்ஸஸ் .ஆனால் கொரானா வந்து போட்டுப்பார்த்து விட்டது.தியேட்டர் சரியில்ல. 5 கோடி அவுட்.
சரி இதுதான் இப்படின்னா
ஹிட் .ராஜ்குமார் ராவ் படம். முதல் வாரத்தில் 15 கோடி வரும்னு நினைச்சேன் .செம அடி . 6 கோடி தான் நெட்வந்தது “என்கிறார் ஆந்திராவின் சினிமாசிங்கம் .!












