“மன்னிப்பு கேட்காவிட்டால் கொல்லப்படுவாய்” என்பதாக இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிஷ்னாய் சமூகத்தை சேர்ந்த குண்டரான லாரன்ஸ் இரண்டாவது தடவையாக மிரட்டி இருக்கிறார்.
இந்தாளு மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் ..மாநில வாரியாக இருக்கிறது.தற்போது ஜெயில் குருவி.!
பிளாக் பக் எனப்படும் அரியவகை மானை வேட்டையாடியதாக சல்மான் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மான் இனத்தை பிஷ்னாய் சமூகத்தினர் தெய்வாம்சமாக கொண்டாடுகிறார்கள். மூஞ்சுறு என்கிற எலி இனத்தை பிள்ளையாரின் வாகனமாக இந்துக்கள் வழிபடுவதைப்போல.!
அந்த மானை வேட்டையாடிய சல்மானை கொன்றுவிடுவோம் என்பதாக லாரன்ஸ் மிரட்டியிருப்பதாக டெல்லி ஸ்பெஷல் போலீஸ் கூறியிருக்கிறது.
லாரன்ஸின் அதிக பட்ச கோரிக்கை “பொதுமக்கள் முன்னிலையில் சல்மான்கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் “என்பதுதானாம்.
பிளாக் பக் வழக்கில் விடுதலையாகிய சல்மான் எப்படி மன்னிப்பு கேட்பார். அப்படி கேட்டால் கோர்ட்டின் தீர்ப்பு பிழையாகிவிடுமல்லவா ?