
‘தம்’அடிப்பதிலும் தனி சுகம் இருக்கும் போலிருக்கிறது.
அதை நடித்துக்காட்டுவதற்கும் தில் வேண்டும்.
ஷில்பா மஞ்சுநாத். கன்னட நடிகை. காளி என்கிற படத்தின் வழியாக தமிழுக்கு வந்தவர். கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் நடித்திருந்தவர்தான் ஷில்பா .தற்போது வெப் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பேரழகி, தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படங்களுக்குப் பிறகு . நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் இணையாக நடித்திருக்கிறார். ஹரூன் இயக்கி உள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெப் சீரியலுக்கான புகை பிடிக்கும் காட்சியில் தம் அடித்து அங்கிருந்தவர்களை அசர அடித்திருக்கிறார் ஷில்பா .
இது போதாதா ,நடிகை ஷில்பா மஞ்சுநாத்துக்கு போதை பழக்கம் இருக்கிறது.கஞ்சா அடிப்பதில் கில்லாடி என்றெல்லாம் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
அதைப்பற்றி எல்லாம் நடிகைக்கு கவலை இல்லை. “இது எனக்கு விளம்பரம்தான்” என்கிறார்.












