
திரைப்பட விழாக்களில் ‘யூடுயூபர்களுக்கு’ கன்டென்ட் கொடுப்பதற்காகவே பேச வருகிறவர்களில் முதன்மையானவர் கே.ராஜன். அடுத்து பேரரசு ,ராதாரவி ஆகிய மூவருமே முப்பெரும் நிலைய வித்துவான்கள்.
‘டைட்டில் ;என்கிற படத்தின் ட்ரெய்லர் ,பாடல் வெளியீட்டு விழாவுக்கு கே.ராஜன் வரவில்லை. ராதாரவி ,பேரரசு இருவரும் வந்திருந்தனர். இவர்களில் பேரரசு பக்கா பாஜக. அந்த கட்சியில் ராதாரவிக்கு என்ன கிரேடு என்பது தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டவர்களில் பேரரசு இருந்தார்
ராதாரவியை அந்த இடத்தில் காணவில்லை. 
சரி இப்போது அதெற்கென்ன ?
இங்கேதானேய்யா சூட்சுமம் இருக்கிறது.
“வாடி வா! மாட்னியா !! “என்கிற வார்த்தை பிரயோகத்துடன் ராதாரவியை விமர்சித்தார் பேரரசு.! இவ்வளவு தரம் தாழ்ந்து ரவியை யாரும் சொன்னதில்லை.
தாடி வைத்திருப்பவர்களை ராதாரவி தன்னுடைய பாணியில் அன்று விமர்சித்தார்.இதுதான் பிரச்னை.
“முன்பெல்லாம் நாயகர்கள் தாடி வைப்பதில்லை.சோக காட்சிகளுக்கு மட்டுமே தாடி பயன்பட்டது.ஆனால் இது அப்படியே மாறிவிட்டது. தாடி சோம்பேறித்தனத்தின் அடையாளமாகும்” என்று பேசினார். இவர் பேசிவிட்டு கிளம்பி சென்றபின்னர் மைக்கை பிடித்த பேரரசு “வாடி வா! மாட்னியா !இதுக்குத்தான் காத்திருந்தேன் . பிரதமர் மோடி தாடி வெச்சிருக்காரே அவர் சோம்பேறியா,அமித் ஷா வெச்சிருக்காரே அவரும் சோம்பேறியா ?” என்று ராதாரவிக்கு செக் வைத்து நக்கலாக பேசினார். இப்படி பேசியது எத்தனை நாள் காத்திருப்போ தெரியவில்லை.!
இவர்க்கு ராதாரவி பதில் சொல்வாரா?
டைட்டில் என்கிற படத்தை டெல்லிபாபு தயாரிக்க ,ரகோத் விஜய் டைரக்ட் செய்திருக்கிற அந்த படத்தில் விஜித் நாயகனாக நடித்திருக்கிறார்.அஸ்வினி சந்திர சேகர் நாயகியாக நடித்திருக்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் செமையாக குத்தாட்டம் போட்டிருக்கிற படம் இது.












