மீடியாக்களுக்கு பரபரப்பான செய்திகள் தேவைப்பட்டால் அவர்களாகவே கொளுத்துகிற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது.
கதாசிரியர்கள் தோற்கிற அளவுக்கு தரமான செய்திகளை சுற்றுக்கு விடுவார்கள்.
இப்படித்தான் அண்மையில் நடிகை த்ரிஷா காங்கிரஸில் சேரப்போவதாக ஒரு தகவல்!
திரிஷா சேருவதற்கு ஆசைப்பட்டாலும் அவரது அம்மா சேர விடுவாரா என்ன ,கல்யாண மேடை வரை சென்ற திரிஷாவை கையைப்பிடித்து இழுத்து வந்தவரல்லவா!
இவர் சொன்னதைத்தானே பிரபல தமிழ் ,ஆங்கில நாளேடுகள் திரிஷாவின் பேட்டியாக முன்பு வெளியிட்டு வந்தன.
சரி இந்த தகவலைப்பற்றி காங்கிரஸ் தலைவர் ஈ .வி.கே.எஸ் இளங்கோவன் என்ன சொல்கிறார்.
“யார் யாரோ த்ரிஷா காங்கிரஸில் இணையப்போகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்தத் தகவல் உண்மையா என்பதும் எனக்குத் தெரியாது.
ஆனால், த்ரிஷா வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு பயனோ பலமோ உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது. காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி. அதனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்”.என்று நெற்றிப்பொட்டில் அடித்தமாதிரி சொல்லிவிட்டார்.
பொதுவாக நடிகைகளினால் ஆட்களை திரட்டி கூட்டம் காட்டமுடியும் ,தவிர வாக்குகளை திரட்டி வெற்றி பெற இயலாது .மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.