
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா ஒளிப்பதிவில், விவேக்-ஜெஸ்வந்த் இரட்டையர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள், சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன்,பேரரசு இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் மற்றும் அவரது சகோதரர்களான வரகுணன் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம் ஆகியோரின் தாயார் கமலாதேவி பஞ்சலிங்கம் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் இரண்டு மரக்கன்றுகளையும் பரிசாக வழங்க அசத்தலாக நிகழ்ச்சி துவங்கியது.
இயக்குநர் அருண்குமார் பேசும்போது, “இது எனக்கு முதல் படம்தான்.. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ கால் மூலமாகவே பேசி அவரிடம் சம்மதம் வாங்கினேன். அந்த அளவிற்கு என்னை நேரில் பார்க்காமலேயே என்மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு, ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தது. அதனால் அவரை கடவுள் அனுப்பி வைத்த ஏஞ்சல் என்றுதான் சொல்வேன்.
இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள மைக்கேல் தங்கதுரை ஒரு காட்சியில் குறுகலான ஒரு குகைக்குள் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தார். அதுமட்டுமல்ல காடுகளில் எடுத்த காட்சிகளில் கூட தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் நடித்ததை மறக்க முடியாது. ஃபேண்டசி த்ரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் சினேகன் எழுதியுள்ள நீதானே என்கிற பாடல் நான் திரும்பத்திரும்ப கேட்கும் ஒரு பாடல் ஆகும்” என்றார்.
நாயகன் மைக்கேல் தங்கதுரை பேசும்போது, “நான் நடித்த ஊமைச்செந்நாய் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜூ மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.. நான் சினிமாவில் நுழைந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. கடின உழைப்பைத்தான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். அதற்கான பலன் இந்த படத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் வரகுணன் பஞ்சலிங்கம் பேசும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இரண்டு குறும்படங்களை எடுத்துள்ளோம். அடுத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தபோது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்திலேயே எடுக்கவேண்டும் என தீர்மானித்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.
மாஸ்டர் மகேந்திரன் ,நடிகை கோமல் சர்மா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன் .இயக்குநர் பேரரசு ,தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் ஆகியோரும் பேசினார்கள்.
பாஜகவில் இணைந்திருக்கிற பேரரசு தனக்கு தெரிந்த திராவிட -தமிழறிவை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்திக்கொண்டார்.
“கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் என்று இயக்குனர் சுப்பிரமணிய சிவா இங்கே பேசினார். ஆனால் அது உண்மை அல்ல.. தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழறிவால் தான் கதை எழுதினார்களே தவிர, திராவிட அறிவால் அல்ல. வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள்,.”என்கிறார் பேரரசு.
தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம்












