Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகைகளை பற்றி சுந்தர்.சி.விரிவான அலசல்.! ஆராய்ச்சி !!

admin by admin
October 3, 2022
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சுந்தர்.சி யின் படம் என்றால் பேமிலியோடு படத்தைப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கை அவர் படம் டைரக்ட் பண்ணிய காலத்தில் இருந்து இன்று வரை இருக்கிறது.

You might also like

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாம வயிறு குலுங்க சிரிச்சிட்டு வரலாம் ,நல்ல ஜீரண சக்தி கிடைக்கும் என்று மக்கள் வருவார்கள் .அவர் வெகுஜன டைரக்டர்.

அவருடைய படம்தான் ‘காபி வித் லவ்.’ டைட்டிலே செமத்தியா இருக்குல்ல !

இந்தப்படத்தை ராசிக்கார ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ்.

நம்ம சுந்தர்.சி என்ன சொல்றார்னா…..!

“நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை யோகி பாபு , மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம் அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார் சிரிப்பு டைரக்டர் சுந்தர்.சி.

அதானே விஜய் டி .வி. டிடி என்றால் இண்டஸ்ட்ரி பேமஸ் ஆச்சே ..!

இயக்குனர் சுந்தர்.சியுடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவருடன் நண்பராக பயணித்து வரும் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் பேசும்போது, ‘இதுவரை 170 படங்களில் நான் நடித்துள்ளேன். அதில் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றும் 35 வது படம் இது” என்றார்.

நடிகை ரைசா வில்சன் ,நடிகர் ஜீவா ,பிக்பாஸ் சம்யுக்தா, நடிகை ஐஸ்வர்யா தத்தா ,இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ,கவிஞர்  சினேகன்,ஆகியோரும் தங்களின் கருத்துகளை சொன்னாலும் ,சிரிப்பு டைரக்டர் சுந்தர்சியின் மனைவி குஷ்பு சற்று வருத்தமுடன் கருத்தை பதிவு செய்தார்.

‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன் அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.. இந்த படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னை படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமணநாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன்செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.

இந்த படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள் ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம் என்று கூறினார் சுந்தர்சி.. மற்றவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார்” என  ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் குஷ்பு. அரசியல்வாதி ஆச்சே .!

காபி வித் காதல் படக்குழுவினர் 200 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாக நீதி கட் சித் தலைவர்  ஏ.சி.சண்முகம் அறிவிப்பு செய்து ஆச்சரியமூட்டினார். இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளா ?

இந்த படத்தில்

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் ,சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் திறமைகளை காட்டுகிறார்கள்.

இவர்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் இவர்கள்தான்.!

எழுத்து, இயக்கம் – சுந்தர் சி ,தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் , ஏ.சி.எஸ். அருண் குமார்,இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – இ..கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை – குருராஜ். ,நடனம் – ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா, சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், நிர்வாக தயாரிப்பு – பாலா கோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே. அஹ்மத்

Tags: காப்பி வித் காதல்குஷ்புசம்யுக்தாசுந்தர்.சிஜீவாஜெய்யோகிபாபுரைசா அம்ரிதாவிச்சு
admin

admin

Related Posts

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!
News

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

by admin
September 20, 2026
ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!
News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

by admin
September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!
News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

by admin
September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!
News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

by admin
September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!
News

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

by admin
September 19, 2026

Recent News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?