Thursday, July 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமல்ஹாசன்–சரத்குமார் மோதல் .! இந்துவா ,இல்லையா ?

admin by admin
October 8, 2022
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“சோழர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை.பிரிட்டாஷார் நமக்கு அளித்த பெயர் ” என்கிற உண்மையை உலகநாயகன் கமல்ஹாசன் சொன்னதற்கு எதிராக கண்டனங்கள் கிளம்பி இருக்கின்றன.

You might also like

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

இந்து மதம் என்பதற்கு ஆதரவாக இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிற பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமாவை பொறுத்த வரை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அறிக்கையின் முடிவில் ‘வீரத்தமிழன் ராஜராஜசோழன் ‘ என சொல்லியிருந்தாலும் அறிக்கை முழுவதும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பது போலவே டோன் இருக்கிறது.
இனி அறிக்கையின் முழு விவரம்.:

“மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா?

சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.

1790 – ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது?
குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்?

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா?

அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா?

இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?

கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது?

தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா?

தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா?

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?

யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு – வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது?

புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.

அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் (Alice) என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்

என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்.

Tags: இந்து மதம்கமல்ஹாசன்சரத்குமார்
admin

admin

Related Posts

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!
News

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

by admin
July 29, 2026
அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !
News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

by admin
July 29, 2026
‘லைட் வெயிட் பேபி’    படப்பிடிப்பு நிறைவு!
News

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !
News

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

by admin
July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !
News

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

by admin
July 29, 2026

Recent News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

July 29, 2026
‘லைட் வெயிட் பேபி’    படப்பிடிப்பு நிறைவு!

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

July 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?