
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இந்தி பிக்பாஸ் 16 -ன் ஹோஸ்ட் பண்ணுகிறவர்.
இவரது தலைமையில்தான் தயாரிப்பாளர் சஜித் கான் என்பவர் பிக்பாஸில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
சரி அதுக்கு என்ன?
அந்த ஆள் மிகவும் மட்டமானவர் என்கிறார்கள் நடிகைகள் .
ஒரு மனிதனை இழிந்தவர் ,கேவலமானவர் என்று சொல்கிறோம் என்றால் அதற்கு அவரது நடவடிக்கை காரணமாக இருக்க வேண்டும் அல்லவா ? இருக்கிறது என்கிறது பாலிவுட் நடிகையர் அணி.
தயாரிப்பாளர் பாரா கானின் சகோதரர் என்கிற காரணத்தால் இவர் பிக் பாசில் நுழைக்கப்பட்டாரா என்று பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நடிகை ஷெரிலின் சோப்ரா கேள்வி கேட்டிருக்கிறார்.
மீ டு குற்றசாட்டில் அடிவாங்கியவர்தான் இந்த சஜித் கான்.!
இன்னொரு பயங்கரம் என்னவெனில் …ச்சே சொல்லவே நா கூசுதுங்க.
“மிஸ்டர் சல்மான் கான் ,நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று சொல்கிற ஷெரிலின் அந்த மட்டமான மனிதனின் ‘செக்சுவல் மிஸ்காண்டக்ட் ‘பற்றி சொல்லியிருக்கிறார்.
“தனது அந்தரங்க பகுதியை திறந்து காட்டிவிட்டு அதன் நீளம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட சொன்னவர் அந்த ஆள்.ஒரு செக்ஸ் வன்முறையாளர் .அவரை பிரபலப்படுத்தவா பிக்பாஸ்? சல்மான் கான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் “என்று ஷெரிலின் சொல்லியிருக்கிறார்.இவர் மட்டுமல்ல பல நடிகைகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இவ்வளவு கேவலமாக வடக்கே பிக்பாஸ் போய் கொண்டிருக்கிறது.
ஆனால் தெற்கில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்கிற பிக்பாஸில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதியை பங்கேற்க செய்து அறிவார்ந்த விவாதம் நடப்பதற்கு வழி காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த விக்ரமன்தான் அந்த அரசியல்வாதி.












