தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி நீள அளவு சொல்லும்படி நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தவர் பாலிவுட் படத் தயாரிப்பாளர்.
இவர் மீது நடிகைகள் புகார் கொடுத்தால் காவல் துறை கண்டு கொள்வதில்லை. திரைப்பட அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை. சஜித் கான் அந்த அளவுக்கு செல்வாக்கானவர். இவரது சகோதரனும் தயாரிப்பாளர்தான்.!
தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஹோஸ்ட்டாக இருக்கிற பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஜித் கானும் கலந்து கொண்டிருக்கிறார்..
பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்கிற இந்த மனிதரை சேர்த்ததற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.இருந்தாலும் சல்மான் கண்டு கொள்ளவில்லை.
அலுவலகம் சென்றபோது தன்னிடம் அந்தரங்க உறுப்பினை காட்டியதுடன் அதை தொட வைத்தார் என்று நடிகை ஷெர்லின் சோப்ரா .அண்மையில் மும்பை காவல் நிலையத்திலும் புகார் செய்திருக்கிறார்.
ஆனால் பலனேதும் இல்லை.
இந்த நிலையில்தான் அழுதபடியே பேசிய வீடியோ வைரல் ஆகியிருக்கிறது.
சஜித் கானை சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தான் பாதுகாக்கிறார். அதனால்தான் யாராலும் அவரை எதுவும் செய்யமுடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.பாலிவுட் நடிகை.