Thursday, October 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சமந்தாவின் தொழில் பக்தி.! யசோதா படத் தயாரிப்பாளர் உருக்கம்.!

admin by admin
November 9, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்: ‘’யசோதா’ படத்தின் கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்”

You might also like

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார்.

‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமானத் தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார். அதில் இருந்து,

‘யசோதா’ சமந்தாவின் முதல் பான் இந்தியா திரைப்படம், இது எப்படி ஆரம்பித்தது?
‘சம்மோஹனம்’ படத்திற்குப் பிறகு நான் தயாரித்திருக்கும் நேரடி படம் ’யசோதா’. என்னுடைய மாமா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின்  ஆசீர்வாதம் இந்தப் படத்தில் உண்டு என நம்புகிறேன் .

என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து ‘யசோதா’ படத்தின் கதைக் கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது.  கோவையைச் சேர்ந்த சிலத் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகுதான் நானும் என் தரப்பிலிருந்து சில கருத்துகளைச் சொன்னேன்.

தமிழ்த் தயாரிப்பாளர்களிடம் சென்ற கதை உங்களிடம் வந்தது எப்படி?
நான் ஹைதராபாத் வந்தடைந்ததும், என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, இந்தப் படத்தில் இருந்து சில தமிழ் தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள். நீங்கள் இப்போது படத்தைத் தயாரிக்க ஆர்வமாக உள்ளீர்களா எனக் கேட்டார். பின்பு, இந்தக் கதையை நான் மீண்டும் ஒருமுறை அக்டோபர் மாதத்தில் கேட்டுவிட்டு இந்தத் திரைக்கதை கேட்கும் விஷயத்தை மீண்டும் டெவலப் செய்து வரும்படி கேட்டுக் கொண்டேன். இந்தக் கதையின் உள்ளடக்கத்தைப் பார்த்து, 7-8 மாதங்கள் கழித்து மீண்டும் திரைக்கதையில் வேலை பார்த்து இன்னும் மெருகேற்றி வந்தார்கள். பிறகே, ‘புஷ்பா’ & ‘கே.ஜி.எஃப்’ படங்களின் டப்பிங் போய்க் கொண்டிருந்தது. பின்பு, சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.

இந்த ஸ்கிரிப்ட் தயாரானதும்தான் சமந்தாவிடம் கதை சொன்னீர்களா?
ஆமாம்! ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார். அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார் . அவர் கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டார்.

‘யசோதா’ படத்தில் சமந்தாவுடன் வேலை பார்த்தது அனுபவம் எப்படி இருந்தது?
’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.

சமந்தாவின் உடல்நலன் குறித்து நிறையத் தகவல் வந்துள்ளது. படத்தின் வெளியீட்டின் போது அவர் இல்லாமல் இருப்பது எப்படி இருக்கிறது?
சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும் டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவர் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம். அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.  அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.
‘யசோதா’ படத்தின் கதை என்ன? வாடகைத் தாய் வியாபாரம் பற்றி கூற வருகிறதா?
அப்படி கிடையாது. வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம்.
கதாநாயகியை மையப்படுத்திய படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுவதில் ரிஸ்க் இருப்பதாக நினைக்கிறீர்களா?
கதை நன்றாக இருந்தால் பார்வையாளர்கள் நிச்சயம் படத்தைக் கொண்டாடுவார்கள். முதல் முறையாக, ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பு எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் இருக்கிறேன். பட வெளியீட்டிற்கு பின்பும் அப்படியே இருப்பேன்.
‘யசோதா’ படத்தின் பட்ஜெட் மிகப் பெரிய அளவில் உள்ளது. தயாரிப்பில் வேறு யாரேனும் உங்களுடன் இருந்தார்களா?
சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் இணைத் தயாரிப்பாளராக இருந்து எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்”.என்கிறார்

 

Tags: கிருஷ்ணா பிரசாத்சமந்தாடி ஒன் பி.ஆர்.ஓ.யசோதா
admin

admin

Related Posts

’டோரதி’  எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!
News

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

by admin
October 14, 2026
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!
News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

by admin
October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !
News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

by admin
October 14, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ்’!
News

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

by admin
October 13, 2026
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !
News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

by admin
October 13, 2026

Recent News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

October 14, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ்’!

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

October 13, 2026
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

October 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?