Thursday, October 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யசோதா சமந்தா உருக்கமான பேட்டி.!

admin by admin
November 9, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் யசோதா  படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.அவரது உடல் நலம் பற்றியும் பேசியிருக்கிறார்.
“நன்றாக தேறி வருகிறேன். சீக்கிரமாக பரிபூரணமாக குணமடைந்து விடுவேன். ‘யசோதா’ படம் வெளியாவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”என்று சொன்ன அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.‘யசோதா’ படத்தின் டீசர் & ட்ரைய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்புக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மகிழ்ச்சியாக இருக்கும் அதேசமயம் சிறிது படபடப்பும் இருக்கிறது. நீங்கள் ட்ரைய்லர் & டீசரில் பார்த்துள்ள காட்சிகளைத் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக படம் இருக்கும். ட்ரைய்லர் போலவே, படத்திற்கும் பார்வையாளர்கள் தரும் அன்பிற்காகக் காத்திருக்கிறேன்.’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்? எந்த ஒரு விஷயம் இந்தப் படத்தை நீங்கள் ஒத்துக் கொள்ள வைத்தது?
’யசோதா’ போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக்கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி & ஹரிஷ் இருவரும் புதிய ஒரு கான்செப்ட்டோடு வந்திருக்கிறார்கள்.

வாடகைத்தாய் விஷயம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
அதுபற்றி ஒரு வலுவான கருத்து எனக்கு கிடையாது. நான் புரிந்து வைத்துள்ள வரைக்கும் பெற்றோர் ஆக விரும்பும் அளவுக்கு அது ஒரு தீர்வு, நம்பிக்கை.   நான் இப்போது படம் குறித்து எதாவது தெரியப்படுத்தினால் அது படம் பார்க்கும் மொத்த அனுபவத்தையும் கெடுத்து விடும். இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை இது எல்லாமே நீங்கள் பெரியத் திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.  
 ஆக்‌ஷன் த்ரில்லர் எந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
ஒரு படம் முடித்து விட்டு அடுத்த கதை கேட்கும்போது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ‘யசோதா’வுக்கு முன்பு நான் செய்த ‘யூ-டர்ன்’ ஒரு த்ரில்லர் கதைதான். ஆக்‌ஷன் பொருத்த வரைக்கும், ‘ஃபேமிலி மேன்’ கதையில் நான் செய்த ராஜீதான் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஆக்‌ஷன் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.
வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் என படத்தில் இவர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
இவர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தது உண்மையில் நல்லதொரு அனுபவம். இது போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்ற திட்டம் ஆரம்பத்திலேயே இருந்ததா அல்லது படம் ஆரம்பித்ததும் இந்த முடிவா?
இந்தக் கதை வலுவான உணர்வுகளைக் கொண்டுள்ளது மற்றும் பார்வையாளர்களையும் இது கட்டிப் போடும் விதமாக அமையும். இதை கதையின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் பார்த்தோம். அதன் பிறகு படம் ஆரம்பித்ததும் அதன் மீது எங்களுக்கு நம்பிக்கை அதிகம் ஆனது. அதன் பிறகு நாங்கள் ஐந்து மொழிகளிலும் வெளியிட முடிவெடுத்தோம். ‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக் கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் –  இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.
நீங்கள் இந்தப் படத்தின் டப்பிங்கை ட்ரிப் ஏற்றிக் கொண்டே செய்தீர்கள். எது உங்களை அப்படி செய்ய உந்தியது. வேறு ஒருவரை வைத்துக் கூட நீங்கள் டப் செய்திருக்கலாமே?
நானே இந்தப் படத்திற்கு டப் செய்ய வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும் போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப் செய்ததில் மகிழ்ச்சிதான்.
என் மீது ரசிகர்கள்  காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என்றார் சமந்தா .

Tags: சமந்தாயசோதாவரலட்சுமி சரத்குமார்
admin

admin

Related Posts

’டோரதி’  எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!
News

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

by admin
October 14, 2026
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!
News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

by admin
October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !
News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

by admin
October 14, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ்’!
News

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

by admin
October 13, 2026
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !
News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

by admin
October 13, 2026

Recent News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

October 14, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ்’!

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

October 13, 2026
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

October 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?