
இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலை மையமாகக் கொண்டவைகளாகவே இருக்கும்.
கருமேகங்கள் கலைகின்றன என்கிற அவரது புதிய படைப்பு அவரின் சிறுகதையை அடிப்படையாக கொண்டது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது. இப்படத்தின் மைய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அருவி’ அதிதி பாலன் குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் கூறுகையில்,”இக்கதையின் ஆணி வேரான இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகையை தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலான இப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்.”என்கிறார்.
இயக்கு












