
“சனாதன தர்மம் என்ன சொல்லுதுன்னா கடவுளும் போதை ஆளுதான். மது குடிக்கிறவர்தான் “என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறவர் கருப்புச்சேலை அணிந்த திராவிடர்கழகத்தவர் அல்லர்.
“நான் 100 பெர்சன்ட் இந்து “என்று சொல்கிற சினிமா நடிகை. அதுவும் சரத்பவாரை பற்றி பேஸ்புக்கில் கருத்துச் சொல்லி கைது ஆன கில்லாடி நடிகை. பெயர் கேடகி சிட்டாலே .
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன போது ,அதுவும் எப்படி ,சரக்கு அடிச்சபடியே வீடியோவில் தில்லாக பேசி விவகாரத்தை வாங்கி இருக்கிறார்.சூப்பர் சரக்கு போல.!
வாசகர்களே, தைரியத்தை பாராட்டுங்க.!
“பாதர் ..!அவர்களை மன்னியுங்கள் !!அவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்!” என்று பைபிளையும் எடுத்துக்கட்டியிருக்கிறார்.
” என்னை வெறுப்பவர்களை மன்னித்து விட்டேன்.அவர்கள் போதிய அளவுக்கு புத்திசாலிகள் அல்லர்.என் மீது வழக்குகளை போடச் சொல்லி வற்புறுத்தப்பட்டதால் கேஸ்களை போட்டவர்களையம் மன்னித்து விட்டேன். இதனால் அவர்களை மறந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. போராட்டம் தொடரும்!”
இப்படி பதிவிட்டதும் மேலை நாகரீகத்தை பின் பற்றுகிற அவளை புறக்கணியுங்கள் என்கிற எதிர்ப்பு தொடங்கியது.
நாரிமணி இதெற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா என்ன?
“மேலை நாகரீகத்தை பின்பற்றுங்கள் என்று எப்போதும் யாரையும் கேட்டதில்லை .சனாதன தர்மத்தில் மது அருந்துவதும் இருக்கிறது.கடவுள் காளிக்கு மது படைப்பது உண்டு.சிவனுக்கும் படைக்கிறார்கள். உங்களுடைய சொந்த கலாசாரத்தை தெரிந்து கொள்ளுங்கள் வேறுபாடுகளை உணருங்கள்..”என்று சொல்கிறார் பாலிவுட் நடிகை.மராத்தியில் பேமஸ்.












