தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு ஆதரவு நிலை எடுத்திருப்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தாறுமாறான அரசியல் நிலையைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை கொள்ளவில்லை.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ரவியின் போக்கினை கடுமையாக கண்டித்திருக்கிறார் .ஆனால் ரஜினி மவுனமாக இருப்பதால் ஆளுநருக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதே பொருள்.
தற்போது ரஜினி ஆந்திராவுக்கு ஜெயிலர் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார் .அங்கு ஒய் எஸ்.ஆர் அரசுக்கு எதிராக இருக்கிற சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திரபாபு நாயுடு பிஜேபியின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஜினியின் ஆதரவு பிஜேபிக்குத்தான் என்பது தெள்ளத்தெளிவு.