சங்கமித்ரா மிகப்பெரிய படமாக அறிவிக்கப்பட்டது.சுந்தர்.சி.யின் இயக்கத்தில் தேனாண்டாள் பிக்சர்ஸ் தயாரிக்கவிருந்த அந்த படத்தில் ஜெயம் ரவி ஆர்யா ஆகியோர் நடிப்பதாக இருந்தது .ஆனாலும் தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரா சிக்கலில் இருந்ததால் அவர்களால் தயாரிக்க முடிய வில்லை.
தற்போது பெரிய பஞ்சாயத்துக்குப் பிறகு புதிதாக ஒரு படத்தை தயாரிக்கப்போகிறார்கள்.
அந்தப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க சுந்தர்.சி இயக்கப் போகிறார். . இந்தப்படத்தில் சந்தானமும் முக்கிய கேரக்டரில்,நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அதனால் அரண்மனை 4 ம் பாகத்தை எடுப்பதென முடிவு செய்தாராம் சுந்தர்.சி.
விஜய சேதுபதிக்கு இருபத்தைந்து கோடி சம்பளமாம். இவ்வளவு சம்பளம் என்பதால் முன்பு ஒப்புக்கொண்ட படங்களைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி என்கிறார்கள்.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.