Thursday, July 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது!” -சிலம்பரசன் பேச்சு.!

admin by admin
March 27, 2023
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

5 மொழிகளில் வெளியான ‘ராமாயணம்’ பட டிரெய்லர் !

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!


ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
 நடந்தது.படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும்.ரகுமான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகரம்  கெளதம் கார்த்திக்கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது  எஸ்.டி.ஆர். எனக்கு  படம் பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் தயாரிப்பில் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கும் அவருக்கு வாழ்த்துகள்!”.
இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “பலரும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் இதனை ஞானவேல்ராஜா எடுத்திருக்கிறார். முதல் 15 நாட்கள் எடுத்துவிட்டு பிறகு, மீண்டும் ரீஷூட் செய்ய வேண்டும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. எஸ்.டி.ஆர்.ரை வைத்து படம் செய்வது சாதாரணம் கிடையாது. ஏனெனில், பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அதை நாம் திருப்திப்படுத்த வேண்டும். இது சிம்புவால் எனக்கு எளிதானது. செட்டில் வரும்போதே அவர் ஏ.ஜி.ஆராகவே வாழ்ந்தார். இதற்காக என் நண்பன் எஸ்.டி.ஆருக்கு வாழ்த்துகள். கெளதம் கார்த்திக்கை நிறைய கொடுமைப் படுத்தி இருக்கிறேன். ஆக்‌ஷன், புழுதி என கடினமான சூழலில் அவருக்கு படப்பிடிப்பு நடத்தினோம். சிறப்பாக செய்திருக்கிறார். கெளதம் மேனன் என்னுடைய பாஸ். சிறப்பான வில்லன். இதுவரை பார்த்திராத ஒரு புதுமுகத்தைப் பார்க்கலாம். பிரியா பவானி ஷங்கருக்கும் நன்றி. எஸ்.டி.ஆருக்கு தங்கை கதாபாத்திரம் நடிக்க தென்னிந்தியாவில் ஒரு நடிகையும் தயாராக இல்லை. ஒத்துக் கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும்தான். அவருக்கும் நன்றி. மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை, அரசியல் என பல தளங்கள் காத்திருந்தும் என் நட்புக்காக ஓடிவந்தார். மதுகுருசாமிக்கும் நன்றி. கேட்டதும் சாயிஷா உடனே ஒத்துக்கொண்டு இந்தப் பாடலை செய்து கொடுத்தார். இந்தப் பாடல் இவ்வளவு நன்றாக வரக் காரணம் சாயிஷா, ரகுமான் இசை, பிருந்தா மாஸ்டர் மூவரும்தான். இப்போது படத்தின் பின்னணி இசையை ரகு மான் சார் செய்து கொண்டிருக்கிறார். அது நிச்சயம் பேசப்படும்.என் தொழில்நுட்பக் குழு என்னுடைய பலம். அவர்கள் அனைவருக்கும் நன்றி”
வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணா ,ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே. பாட்ஷா, நடிகர் கண்ணன் பொன்னையா , கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடிகர் சவுந்தர்குமார் நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே ஆகியோர் பேசினார்கள்.
இந்த படத்தில் சிறப்பாக நடனகாட்ச்சியில் நடித்திருக்கும் சாயிஷா
பேசியதாவது, “நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப்பில் ஏற்பட்டது. இந்த சூப்பரான பாடலை ரஹ்மான் சார் இசையில் பிருந்த மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத்ததற்கு நன்றி. கெளதம் இந்தப் படத்தில் வேறு நபராக இருக்கிறார். அவரது உழைப்புக்கு வாழ்த்துகள். எஸ்.டி.ஆருடன் நான் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், அவரது இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. கடைசியாக எனக்கு எல்லாவிதமான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லிதான் இந்தப் பாடல் நான் செய்தேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததுக்கு நான் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.என்கிறார்.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “’பத்து தல’ படத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். இந்த தொழிலுக்கு வந்துவிட்டு வேலைப் பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கிறேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு
போடுகிறது . அதற்காக எந்த விஷயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன்.
அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன். படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங்குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.என்றார்
நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, ““அன்று இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்தித்தேன். பத்திரிக்கையாளர்களை அங்கு சந்திக்க முடியவில்லை என்பதால், இன்று இங்கு வந்தேன். சிம்பு வருவேனா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. வந்துவிட்டேன் நான்.  , அன்று கெளதம் மேனன் சார் பற்றி மேடை யில் பேச மறந்துவிட்டேன். எனக்குத் தெரிந்து ‘விடிகே2’ பண்ண முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போது வரும் பல படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ’பத்து தல’ வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அது அதிகமாகும். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. மதுகுருசாமி தன்னை நடிப்பிற்காக தன்னை தயாராக்கிக் கொண்டவர். அவருக்கான இடம் காத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறபோது எப்படி அவர்களை சமாளிக்கப் போகிறார் இயக்குநர் என்ற கேள்வி இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இத்தனை நடிகர்களுக்கு திரையில் சரியான இடம் கொடுத்து, இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை முடித்திருக்கிறார். அவரது திறமைக்கு சரியான இடம் உண்டு. சாயிஷா அருமையாக நடனம் ஆடி இருக்கிறார். ’பத்து தல’ படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான். எந்தவிதமான கஷ்டத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவர் பெரிய இடம் அடைய வேண்டும். இந்தப் படத்தில் அவரது ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்து பார்த்தேன். கஷ்டமான ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே எளிதாக செய்துள்ளார். தயரிப்பாளர், என் நண்பர் ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. ஸ்டுடியோ க்ரீனுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும். ‘வேட்டை மன்னன்’ படக் காலத்திலேயே ரெடின் கிங்க்ஸ்லியை ரசித்து பார்த்தேன். அவருடைய உயரம் எனக்கு மகிழ்ச்சி. தனஞ்செயன் சார் சொன்னால் கேட்பேன் என்று சொல்கிறார்கள். அவருடைய அன்புக்கு நான் அடிமை. ரஹ்மான் சார் பல பிஸி ஷெட்யூலுக்கு மத்தியில் இந்தப் படத்தின் இசையை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய அன்புக்கு நன்றி” என்று வாழ்த்தினார் சிம்பு.
 
 
 
 
 
 
Tags: ஒபிலி கிருஷ்ணாகவுதம் கார்த்திக்கவுதம் மேனன்சாயிஷாசிலம்பரசன்ஞானவேல்ராஜாபத்து தல
admin

admin

Related Posts

5 மொழிகளில் வெளியான  ‘ராமாயணம்’ பட  டிரெய்லர் !
News

5 மொழிகளில் வெளியான ‘ராமாயணம்’ பட டிரெய்லர் !

by admin
July 30, 2026
கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !
News

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

by admin
July 30, 2026
காதலும் த்ரில்லும் கலந்த  ‘சிக்னல் அட் 11.30’!
News

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!

by admin
July 30, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!
News

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

by admin
July 30, 2026
அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!
News

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

by admin
July 29, 2026

Recent News

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

July 30, 2026
காதலும் த்ரில்லும் கலந்த  ‘சிக்னல் அட் 11.30’!

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!

July 30, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

July 30, 2026
அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

July 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?