சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நடிகர்கள் மீது கற்களை வீசத் தொடங்கியிருக்கின்றன அக்கட தேசத்து மீடியாக்கள்..
அண்மையில் தெலுங்கு தேசத்து தலைவர் அமரர் என்.டி .ராமராவ் நூற்றாண்டு விழாவுக்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த்.
ராமராவ் முதல்வராக இருந்த காலத்து முன்னேற்றங்களைப் பற்றி சிறப்பித்து பேசினார். இது இயல்பு. ராமராவ் மீது வைத்திருக்கிற மரியாதை.
ஆனால் ஆட்சியிலிருக்கிற ஒய்.எஸ்.ஆர்.கட்சிக்கு பிடிக்கவில்லை. அமைச்சராக இருக்கிறவர்கள் ரோஜா செல்வமணி உள்பட சிலர் ரஜினியை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்து விட்டனர்.
தற்போது அவர்களின் இலக்கு ரஜினிகாந்த்.
ஒரு ஊடகம் பெயரை சொல்லாமல் ஆந்திர தேசத்து தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ஒருவரின் கால்ஷீட் வேணும் என்றால் அவரது மனைவி அல்லது மகள் ஒரு கோடி முதல் 2 கோடி வரை கேட்பார்கள்.பிறகு டேர்ம்ஸ் பேசுவார்கள். இதன் பிறகுதான் கதை ,டைரக்டர்,மற்றவை பேசி முடிவுசெய்யப்படும்.
இன்னொரு நடிகர் ஒரு மாத காலம் பேசி இழுத்தடிப்பார்.பின்னர் மிகவும் இயல்பாக ஒரு கோடி ரூபாய் கேட்பார் .கொடுத்தால் தான் மற்ற விசயங்கள் பேசப்படும்.
தமிழ் நாட்டின் அந்த இரண்டு நடிகர்களும் இப்படித்தான்.தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிக்க வேண்டாம்.என்று எச்சரித்திருக்கிறது அந்த ஊடகம்.!