வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இதன் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் “இப்படத்தின் ஆடியோ விழாவை இந்த முறை மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஏதேனும் ஒரு ஊரில் நடத்தலாம்” என விஜய் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இவ்விழா எங்கு நடத்தப்படும் என்பதே அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில், இப்பட விழா மதுரையில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என்றும், இது லியோ ஆடியோ விழாவாக இருந்தாலும், விஜயின் மக்கள் இயக்க மாநாடாக நடத்தப்படும் என்கிறார்கள்