ஐஸ்வர்யா ராஜேஷ். திறமையுள்ள நடிகை.
அண்மையில் இவர் நடித்து வெளியாகியுள்ள ‘ஃ பர்ஹானா ‘சில அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. சிறப்பாக நடித்திருந்தும் இசுலாமிய பெண்ணாக நடித்ததால் இவர் மீது சிலருக்கு அதிருப்தி. அந்த படத்தில் எந்த மதமும் இழித்துப்பேசப்படவில்லை. குறிப்பாக இசுலாமிய மதம்.
ஆனாலும் சிலர் தவறான பார்வையுடன் அணுகியிருக்கிறார்கள்.தற்போது இவரது வீட்டுக்கு காவலர் பாதுகாப்பு.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தற்போது வேறு ஒரு புகார் சுமத்தப்பட்டிருக்கிறது.
“புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அந்த கேரக்டரில் நடித்திருக்கிற ராஷ்மிகா மந்தனாவை விட சிறப்பாக நடித்திருப்பேன்”
ஃ பர்ஹானா ‘படத்தின் புரமோஷன் காட்சியில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.தற்போது இணையத்தில் இதுதான் ஓடுகிறது.
“தெலுங்கு திரை உலகை நான் விரும்புகிறேன்.ஒரு நல்ல கதையில் நடிக்கவே ஆசை.உலக அளவில் கொண்டாடப்படுகிற விஜய தேவர கொண்டவுடன் நடிப்பதற்கு ஆசை.சிறந்த தெலுங்கு படத்தில் நடித்து பெயர் வாங்கினால் என குடும்பத்துக்கும் பெருமை.எனது பூர்வீகம் ஆந்திரம்.”
இவ்வாறு இவர் சொன்னது இணையதளத்தில் பரபரப்பாகியிருக்கிறது.