நடிகர் தனுஷ் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நாயகனாக களமிறங்கினார்.இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் ‘அட்ராங்கி ரே’ என்ற படமும் வெளியானது. . இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இதே கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்துக்காக இணைந்துள்ளது. மேலும் இது இந்தியில் தனுஷ் நடிக்கப்போகும் நான்காவது படமாக அமையவுள்ளது.
இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த டீசரில் தனுஷ் கையில் ஒரு பாட்டிலும் வாயில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு வெறித்தனமாக ஓடி வருகிறார். நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் அந்த பாட்டிலை வெறித்தனமாக தனுஷ் தூக்கி வீச, அது ஒரு சுவரில் பட்டு தெறித்து,படத்தின் தலைப்பு வெளியாகிறது.இந்த டைட்டில் டீசரில் கேப்டன் மில்லரில் வரும் அதே லுக்கில் தனுஷ்,செம்ம மிரட்டலாக வருகிறார்.
காதல் ஆக்சன் பின்னணியில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். இப் படம் வரும் 2024ல் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் தற்போது தமிழில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.