ஒரு போர் வீரன் மர்ம நோயினால் மாண்டு விடுகிறான். மர்ம நோயின் ஆதாரம் என்ன ,எப்படி அந்த நோய் அவனை தொற்றியது என்பது பற்றி ஒரு இளம்பெண் ஆய்வு நடத்துகிறாள் ,இதுதான் கங்குவா கதை என ஒரு உருட்டு கோலிவுட்டை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
சுருட்டு பிடித்தபடி காலைக்கடனில் கற்பனை செய்வார்களோ என்னவோ.!
பத்து மொழிகளில் படமாகிவரும் கங்குவாவை பற்றி பட உலகம் வியந்துபோய் அண்ணாந்து கிடக்கிறது.
“சூர்யாவின் கேரக்டர் நெருப்பின் இன்னொரு உருவமாம் .தியேட்டரின் ஸ்கிரீன் பற்றிக்கொள்ளும் வகையில் கனல் கக்கும் காட்சிகள் இருக்கிறதாம் ” என்று நடிகை தமன்னாவே வியந்துபோயிருக்கிறார் என்கிறார்கள்.
“கங்குவாவின் கண்ணோட்டம் பார்த்து வியந்து போயிருக்கிறேன் ‘கிளிம்ப்ஸ் ‘அசத்தல்.படத்தின் நாயகி திசா பதானியை சந்தித்துப் பேசியபோது என்னுடைய ஆசையை பகிர்ந்து கொண்டேன்.அந்த படத்தின் கதை காட்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருப்பதை சொன்னேன்” என்கிறார் தமன்னா .ஜெயிலர் நடிகை.!
இந்த படத்தின் முக்கிய வில்லன் பாபி தியோல் என்கிறார்கள். நட்டிக்கு கங்குவா கதையில் முக்கிய இடம் .
“படம் பிரமாண்டம் சார்” என்கிறார் நட்டி!