மலையாளத்தில் ஒரு ‘ஜெயிலர்’ ;தமிழுக்கும் ஒரு ‘ஜெயிலர்’!
ஷகீர் மாடத்தில் என்பவர் மலையாள இயக்குநர் .கேரளாவின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‘ஜெயிலர்’ பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டுத்தான் படத்தை தயாரித்தாராம்.
சன் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தமிழில் ‘ஜெயிலரை’ உருவாக்கியிருக்கிறது.இந்த சிக்கல் தற்போது நீதி மன்றத்தில்.!
தற்போது ரஜினியின் படத்துக்குத்தான் மலையாளத்து தியேட்டர்காரர்கள் முதலிடம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அங்கேதான் சிக்கல் .ஷகீர் மாடத்திலை ‘பேனர் ‘பிடிக்க வைத்திருக்கிறது.
“மலையாளத்துக்கு குறைவாகவும் தமிழுக்கு அதிகமாகவும் சலுகையா ?தமிழ்ப்படங்களை ஆதரியுங்க.அதே நேரத்தில எங்களையும் வாழ விடுங்க” என்கிறார் கேரளாவின் மகன்.