
பலவித யூகங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்மைக்கால சந்திப்புகள்.
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று முடித்து திரும்புகிறபோது இடையில் பல சந்திப்புகளை நிகழ்த்தினார் . பாஜக சார்ந்த தலைமைகளுடனான அத்தகைய சந்திப்பு சில பல செய்திகளை உருவாக்கியது .
“அவரது அரசியல் பாதை முடிவாகிவிட்டது .”என்கிற பொது புத்தியில் அந்த செய்தி இருந்தது.
ரஜினிகாந்தின் அண்ணன் சில ஹேஷ்யங்களை சொன்னார் . அது அவரது ஆசையா ,அல்லது நடக்கப் போகிற நிகழ்வையா என்பது அவரது அடிமனம் மட்டுமே அறிந்திருக்கிற ரகசியம். 
அதாவது “ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்கலாம்”
ஆனால் அது அண்மையில் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை.
சன் நிறுவனத்துக்கு அவர் படம் பண்ணுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் . ஜெயிலர் பட வெற்றியை அடுத்து லோகேஷ் இயக்கதில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். அந்தப்படம் ரஜினியின் ஆசைப்படி இருக்கும் . லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் உத்தி இருக்காது என்பதாக சொல்லப்படுகிறது. 
ஆக வரவிருக்கிற தேர்தலையொட்டி ஆளுநர் பதவியோ ,அரசியல் தொடர்பான அறிவிப்போ வெளிவரலாம் .
திடீரென மலேசியாவுக்கு சென்ற ரஜினிகாந்த் தமிழர்களின் வேட்டி கலாசாரப்படி அந்த நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹீம் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினியின் ஆன்மீகப் பயணம் மிகப்பெரிய மாற்றத்துக்கு வழி வகுக்கிறது என்பதாக சொல்லலாம்.












