‘ஏ ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்துள்ள புதிய படம், ‘வீராயி மக்கள்’. இதில் சுரேஷ் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மலையாள நடிகை நந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க ,அவருக்கு தம்பியாக மறைந்த இயக்குநர் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார் இவர்களுடன் தீபா சங்கர், மெட்ராஸ் ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன். மதுரை பாண்டியக்கா உள்பட பலர் நடித்துள்ளனர் .இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா கூறியதாவது,”இது ஒரு மண் சார்ந்த வாழ்வியல் படம் என்று சொல்லலாம்.
இது தென் மாவட்டத்தில் நடக்கிற ஒரு கிராமத்து கதை. அண்ணன் தம்பி சென்டிமென்ட் கதை தான் இது. இந்த மாதிரி நிறைய படங்கள் வந்திருந்தாலும், நான் இதுல அழுத்தமான உறவு முறைகளை சொல்லி இருக்கிறேன். அதாவது அண்ணன் தம்பி சென்டிமென்ட் என்றாலும் சொந்த பந்தங்களும், உறவு முறைகளும் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பதையும், நம் குழந்தைகளுக்கு நாம சொத்து சுகத்தை சேர்த்து வைக்கவிட்டாலும், சொந்த பந்தங்கள் அவங்களுக்கு துணையா இருக்கணும். அப்படி இல்லாவிட்டால் .நாளைய தலைமுறை அடையாளம் இல்லாமல் போய்விடும் .
காதுகுத்து விழாவில் நம்மை மடியில் உட்கார வச்சுக்கிற மாமா, நம்ம தோளில் தூக்கிக்கொண்டு திருவிழாவுக்கு அழைத்துச் செல்கிற சித்தப்பா, நாம நல்லா இருக்கணும்னு நொண்டி கருப்பன்கிட்ட வேண்டிக்கிற அப்பத்தா, நம் மண் சார்ந்த உறவுகள் இன்னும் அந்த ஈரத்தோடும், பாசத்தோடும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் தான் வாழ்க்கை சூழல் காரணமாகஅவர்களை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம். அப்படி தனித்தனியா இருக்கிற மூன்று அண்ணன் தம்பிகளின் பிரிவும், இணைப்பும் தான் இப்படத்தின் உணர்ச்சிமயமான திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.
அண்ணன் கை பிடிச்சு நடந்த மூணு தம்பிங்க, ஒரு திருமண உறவால் பிரிந்து விடுகின்றனர். இப்படி 25 வருடங்களாக பிரிந்து நிற்கும் உறவுகள் எப்படி இணைகின்றனர் என்பதுதான் இதன் சுவாரஸ்யமான திரைக்கதை இப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
இவர் ஏற்கனவே அழகென்ற சொல்லுக்கு அமுதா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் ஒளிப்பதிவை எம் சீனிவாசன் கவனிக்க,தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்