பிரமாண்டமான படத் தயாரிப்புகளில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் கலைப்புலி தாணு. தயாரிப்பாளர் மட்டுமின்றி இயக்கம்,இசை அமைப்பு என்கிற சிறப்பு முகங்களும் இவருக்கு உண்டு. 2001 -ல் இவர் தயாரித்திருந்த ‘ஆளவந்தான் ‘ திரைப்படத்தை இவரே எடிட் செய்து புதிய ஆளவந்தானை கொண்டு வந்திருக்கிறார். கடந்த 8 தேதி ரீ ரிலீஸ் ஆன ஆளவந்தான் இப்போது ‘அள்ள வந்தான்’ ஆக உருக்கொண்டு வசூலை வாரி எடுத்து வருகிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார் , , ரவீனா டான்டன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்கள்.,
ஆளவந்தான் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில், இப்படம் 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியானது, குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் நடக்கும் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட சில காட்சிகள் இதில் அடங்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘முத்து’ படத்தைக் காட்டிலும் ஆளவந்தான் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன், எத்தனையோ படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் ஆளவந்தானுக்கு தனி சிறப்பு இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரான்டினோ தனது “கில் பில்” படங்களுக்கான அனிமேஷன் உத்தி ஆளவந்தானில் கிடைத்ததாகும் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்….
முற்றிலும் மாறுபட்ட, நடிப்பிலும் உடல் அளவிலும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கமல் நடித்திருப்பது, ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பாம்பு டாட்டுவுடன் சின்ன டான்ஸ் மூவ்மென்ட்டுடன் ‘நந்து’ கமல்ஹாசன் செய்யும் அட்ராசிட்டி காட்சியில், தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கிறது!
தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படத்தை, புதுப்படத்தை பார்ப்பது போல் கமல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லாவற்றிற்கும் முக்கியமாக 2k கிட்ஸ், மத்தியில் ‘ஆளவந்தான்’ படம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இது குறித்து சமூக வலை தளங்களில், குறிப்பாக நந்து கமல்ஹாசனின் உடல் குறித்தும், நடிப்பு குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
–தேவிமணி