கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.இதில் பேசிய இயக்குனர் கவுதம் மேனன், இந்த படம் தாமதமானதற்கு காரணம் தெரியல,ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவோம் நாங்க எங்க வேலையை பார்ப்போம் போயிருவோம். சிம்பு எனக்கு நல்ல நண்பர். அவர் மற்ற நடிகர்களை போல என்னை டார்ச்சர் செய்தது கிடையாது. அவருடன் நிச்சயம் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவேன்”
.இந்த படத்திற்கு நான் தயாரிப்பாளர் கிடையாது ஆக்சுவலா தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் தான் இதன் தயாரிப்பாளர் பர்ஸ்ட் காப்பி அளவில் எடுத்து கொடுத்திருக்கிறேன் எனக்கு பல கஷ்டங்கள் உள்ளது. ஆனால் என்னால் சிவகார்த்திகேயன் போல மேடையில் அழ முடியாது” என சம்பந்தமில்லாமல் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.அச்சம் என்பது மடமையடா என படம் எடுத்துவிட்டு ஒரு வித அச்சத்தோடு பேசிய கவுதம் மேனன் மறைக்க நினைக்கும் விஷயம் என்ன? என பலரும் பேசிக்கொண்டது நம் காதில் சற்று பலமாகவே விழுந்தது.