ஜல்லிக்கட்டு மற்றும் மாடு பிடிக்கும் வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டசந்தனத் தேவன் படத்தைத் தொடங்கியுள்ள அமீர்,இப்படம் குறித்து கூறியதாவது, “இனி என் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆதிபகவன் மாதிரி ஆக்சன் கதைகளை எடுக்க மாட்டேன். காரணம் நான் பார்த்த மண், பழகிய மனிதர்களை வைத்து எடுத்த படங்கள்தான் ராம், பருத்தி வீரன் போன்றவை. அவை பெரிய வெற்றிப் படங்கள். இன்னொன்று, பருத்தி வீரன் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் நான் நடிக்கவே வந்தேன். முதலில் நான் நடிக்கவிருந்த கதையே வேறு. ஆனால் பின்னர் ஒரு கொரியப் பட டிவிடியைக் கொடுத்து, அந்தக் கதையை ரீமேக் பண்ணலாம் என்றார்கள்.ஆனால்,இது எனக்கு செட் ஆகாது என்று கூறியும் விடாமல்,வற்புறுத்தி , என்னை நடிக்க வைத்தனர். அந்தப் படம்தான் யோகி.ஆக்சன் படங்களை நம்மால் எடுக்க முடியாதா என்ற வீராப்பில் எடுத்த படம் ஆதிபகவன். சரியாகப் போகவில்லை. எனவேதான் இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் இறங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்,” என்கிறார்.