சென்னை உட்லன்ட்ஸ் திரையரங்கில் வருகிற மார்ச் 5-ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.
தலைவர் சங்க பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு விஷால் அறிவித்தார். இதையடுத்து விஷால் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.